ELUTHAMILA

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை காடுகளுக்குள் தவிக்க விட்ட அரசு, இன்று நஷ்டஈடு வழங்குவதாக நாடகம் அரங்கேற்றுகிறது: சிறிதரன்.
யுத்தத்தினால் கொடூரமாக மக்கள் பாதிக்கப்பட்டிருந்த போது, அந்த மக்களை மனசாட்சியே இல்லாமல் ஒரு தறப்பாளுடன் காடுகளில் இறக்கிவிட்ட இலங்கை அரசாங்கம் இன்று சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காக நஷ்டஈடு வழங்கப் போவதாக நாடகமாடுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளி.மாவட்டச் செயலகத்தினால் விநியோகிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நஷ்டஈடு வழங்கலுக்கான விண்ணப்பபடிவமும் இந்த நாடகத்தில் ஒரு பகுதிதான் எனவும், யுத்தம் நிறைவடைந்து 4வருடங்களின் பின்னர் யுத்ததின் சேதங்களுக்கு நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கும் ஒரேயொரு அரசாங்கம் இதுவாகத்தான் இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தினால் சேதமடைந்த வீடுகள், உடமைகளுக்கான நஷ்டஈடு வழங்கலுக்கான விண்ணப்ப படிவம் ஒன்று கிளி. மாவட்டச் செயலகத்தினால் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இது குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றார். விடயம் தொடர்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில், புனர்வாழ்வு அதிகாரசபை என்ற அமைப்பின் பெயரிடப்பட்ட விண்ணப்ப படிவம் ஒன்று யுத்தத்தினால் சேதமடைந்த வீடுகள், உடமைகளுக்கான நஷ்டஈடு வழங்குவதற்கென மாவட்டச் செயலகத்தினால் நேற்று முதல் விநியோகிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த விண்ணப்படிவங்களை பொதுமக்கள் பெற்று பூரணப்படுத்தி 28ம் திகதி மீளளிக்கவேண்டும். ஆனால்; அந்த விண்ணப்ப படிவத்தில் காணி உறுதி, பிறப்புச் சான்றிதழ், வாக்காளர் பதிவு, வங்கி புத்தகத்தின் பதிவு இலக்கம், ஏற்கனவே நஷ்டஈடு பெறவில்லை என கிராமசேவகரின் உறுதிப்படுத்தல், மொத்த அழிவு பற்றிய மதிப்பீடு, மற்றும் வீடு அழிந்தமையினை உறுதிப்படுத்தும் தொழில்நுட்ப உத்தியோகஸ்த்தரின் அறிக்கை, பொலிஸாரின் உறுதிப்படுத்தல் அறிக்கை போன்றன கேட்கப்பட்டிருப்பதுடன், 35ம் இலக்க பவுச்சர் ஒன்று போடப்பட்டு 2ரூபா 25சதம் முத்திரையொன்றும் ஒட்டப்பட்டு அதில் சமாதான நீதவான் ஒருவரின் உறுதிப்படுத்தலும் போடப்படவேண்டும். இவையனைத்தும் 4நாட்களுக்குள் செய்யப்பட முடியுமா? இதைவிட மாவட்டத்தில் சுமார் 4ஆயிரத்திற்கும் அதிகமானளவு விண்ணப்ப படிவங்கள் விநியோகிக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் மாவட்டச் செயலகத்தில் விண்ணப்ப படிவங்கள் நிறைவடைந்து போட்டோ பிரதி எடுக்கும் வர்த்தக நிலையங்களில் ஒரு படிவத்தை 100ரூபா கொடுத்து மக்கள் கொள்வனவு செய்கின்றனர். மேலும் அந்த விண்ணப்பபடிவத்தில் 1983ம் ஆண்டு யூலை 26ம் திகதியில் இருந்து பயங்கரவாத வன்செயல்களினால் சேதமாக்கப்பட்ட வீடுகள், உடமைகள் தொடர்பான பதிவுகள் மேற்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளதுடன், சேதமாக்கப்பட்ட போது ஏன் முறைப்பாடு செய்யவில்லை என்ற காரணத்தை குறிப்பிடும் படியும் கேட்கப்பட்டுள்ளது.

எனவே இதுவொரு ஏமாற்று நாடகமாகும். ஏனெனில் கிளிநொச்சி மாவட்டத்தில் பல தடவைகள் யுத்தமும், இடப்பெயர்வும் ஏற்பட்டது. இதனால் பல வீடுகள், பெறுமதி கணிப்பிடப்பட முடியாதளவு உடமைகள் அழிக்கப்பட்டன. ஆனாலும் அவற்றுக்கான நஷ்டஈடுகள் எவையும் வழங்கப்படவில்லை. ஆனாலும் மக்கள் தங்களது சொந்த முயற்சியினால் வீடுகளை மீளக் கட்டிக்கொண்டதுடன், சிறியளவிலேனும் உடமைகளை தேடிக்கொண்டனர். இந்தநிலைதான் 2009ம் ஆண்டு யுத்தத்தின் பின்னர் மீள்குடியமர்ந்த பிரதேசங்களில் ஏற்பட்டுள்ளது. அதாவது மக்கள் தங்கள் வீடுகளையும், உடமைகளையும் தேடிக்கொண்டனர். எனவே நியாயமாக நஷ்டஈடு வழங்கும் அரசாங்கம் யுத்தம் நிறைவடைந்து மக்கள் தங்களது வாழ்விடங்களுக்குத் திரும்பியவுடன் தகவலுக்காகவேனும் அழிக்கப்பட்ட வீடுகள், உடமைகள் பற்றிய தகவலை திரட்டியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் யுத்தம நிறைவடைந்து 4 வருடங்களின் பின்னர் இந்த நாடகத்தை ஆடுகின்றது. இதன் மூலம் மக்களுக்கு நியாயம் கிடைக்கப்போவதில்லை, அவர்கள் விண்ணப்பத்தில் கேட்டிருக்கும் தரவுகளை ஆதாரங்களுடன் வழங்குவது தற்போதுள்ள நிலையில் பெருமளவு சாத்தியமில் லை எனவே அரசாங்கம் சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காக இந்த நாடகத்தை ஆடுவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

இழந்த உயிர்களைத் தவிர ஏனைய அனைத்தையும் வடக்கு கிழக்கு மக்களுக்கு வழங்கத் தயார்: ஜனாதிபதி மஹிந்த.
வடக்கு கிழக்கு மக்களுக்கு இழந்த உயிர்களைத் தவிர ஏனைய அனைத்தையும் வழங்க அரசாங்கம் தயார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் சிங்கள, தமிழ் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு இந்த பிறந்த மண்ணின் உரிமை இருக்கின்றது. உங்களுக்கு வேறு நாடு இல்லை, உங்களது தாய் நாடு இதுவாகும். இந்த நாட்டை எழுப்பி உங்களது உரிமைகளை வழங்குவதே எமது நோக்கம். உங்களில் எவரையும் இந்த தாய் நாட்டின் தங்கியிருப்பவர்களாக்க திட்டமிடவில்லை. நீங்கள் இந்த நாட்டின் உரிமையாளர்கள். இந்த காணிகளை மீளவும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். போரின் போது இழக்கப்பட்ட உயிர்களைத் தவிர்ந்த ஏனையவற்றை உங்களுக்கு மீள வழங்க நாம் கடமைப்பட்டுள்ளோம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அம்பாறையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாளை முதல் மத்திய அரசு அலுவலகங்களுக்கு பூட்டு போடும் போராட்டம்: தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக்குழு அறிவிப்பு.
மத்திய அரசின் செயல்பாட்டை முடக்கும் விதமாக நாளை முதல் தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப் போவதாக, தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக்குழு தெரிவித்துள்ளது. இந்தக் குழுவின் சார்பில் மாணவி திவ்யா, இளையராஜா ஆகியோர் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது-

எங்கள் போராட்டத்தின் அடுத்த கட்டமாக நாளை முதல் மத்திய அரசின் செயல்பாட்டை முடக்கும் விதமாக தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு பூட்டு போடும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அகில இந்திய வானொலி நிலையத்தை முற்றுகையிட்டு பூட்டு போடுவோம். அதே நேரத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு பூட்டு போடும் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபடுவார்கள்.

வருகிற 31-ந்தேதி போராட்ட விளக்க கருத்தரங்கம் நடைபெற உள்ளது. எங்களை பொறுத்தவரை அமெரிக்காவோ, ஐ.நா.வோ முதன்மை இல்லை. இந்திய அரசின் நிலைப்பாட்டை மாற்ற வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை. இலங்கையில் தமிழீழம் அமைவதற்கும், அதற்காக பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கும் இந்தியா தீர்மானத்தை முன் எடுத்து சென்று வலியுறுத்த வேண்டும். இலங்கை பிரச்சினை மட்டுமல்லாமல் முல்லை பெரியாறு, காவிரி பிரச்சினை, தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது போன்ற பிரச்சினைகளில் மத்திய அரசு பாராமுகமாக இருக்கிறது.

தமிழர்களின் பிரச்சினை தனித்த பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. இதே போக்கு தொடர்ந்தால் தனி தமிழ்நாடு என்ற கோரிக்கையும் எழலாம். அதை தவிர்க்க முடியாது. எங்கள் போராட்ட அமைப்பில் 38 கல்லூரிகளைச் சேர்ந்த 66 பிரதிநிதிகள் இருக்கிறார்கள். அவர்கள் பல கட்சிகளையும் சேர்ந்தவர்கள்தான். ஆனால் ஈழத்துக்காக ஒரே அடையாளத்துடன் திரண்டுள்ளோம். எங்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்காக கல்லூரிகளை மூடியதை கண்டிக்கிறோம். கல்லூரிகளை உடனடியாக திறக்க வேண்டும். படிப்புக்கும், கல்லூரிக்கும் இடையூறு இல்லாத வகையில் எங்கள் போராட்டத்தை தொடருவோம்.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர்கள் பங்கேற்றால் விளையாட்டு மைதானத்தை முற்றுகையிடுவோம். மத்திய அரசு அலுவலக பெயர் பலகைகளில் மத்திய மற்றும் இந்திய என்ற எழுத்துக்களை தார்பூசி அழிப்போம். வருகிற பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபடுவோம். தேசிய கட்சிகளை ஆதரிக்க மாட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இலங்கை தமிழர் விவகாரத்தில் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்: தி.மு.க.வுக்கு பாஜக அழைப்பு.
இரட்டை வேட நடிப்பை முடித்துக் கொண்டு,தி.மு.க. இலங்கை தமிழர் விவகாரத்தில் உறுதியான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் என பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். இலங்கை தமிழர் பிரச்சனையில் காங்கிரஸ் கட்சி துரோகம் இழைத்துவிட்டது என்று கூறி ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவினை திராவிட முன்னேற்ற கழகம் விலக்கிக் கொண்டது. அதன் பின்னர் காங்கிரஸக்கு வெளியே இருந்தும் கூட ஆதரவு கிடையாது என்று திட்டவட்டமாக தி.மு.க அறிவித்தது.

ஐ.மு.கூ அரசு கவிழ்ந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பில்லை என்றும் தி.மு.க கூறியது.ஆனால் நேற்று நடந்த தி.மு.க செயற்குழுவில் எடுக்கப்பட்ட நிலைப்பாடு முற்றிலும் மாறுபட்டதாகவும் காங்கிரஸக்கு எதிர்ப்பு காட்டாத வகையிலும் இருந்தது வியப்புக்குரியது.செயற்குழு கூட்டத்தில் அன்பழகன் பேசுகையில் மத்திய அரசைக் கவிழ்க்கும் முயற்சிக்கு ஒருக்காலும் துணைபோக மாட்டோம். வகுப்புவாத கட்சிகள் அரியணை ஏறுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.இந்த ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்பது தி.மு.க.வின் நோக்கம் கிடையாது என்று கூறியுள்ளார்.இந்த நிலைப்பாட்டை பார்க்கும் போது, தி.மு.க இன்னமும் தன் முடிவில் உறுதியாக இல்லையென்பதும், ஐ.மு.கூ அரசுடன் உள்ள நட்பை ஒரே அடியாக முறித்துக் கொள்ள விரும்பவில்லை என்பதுமே தெளிவாகிறது.

இலங்கை பிரச்சனையில் தி.மு.க நடத்துவது நாடகமே என்று கண்டித்து வந்த அனைத்து கட்சிகளின் கூற்றை மெய்பிப்பதுபோலவே ,தி.மு.கவின் செயல்பாடுஅமைந்துள்ளது கண்டனத்திற்குரியதாகும்.மேலும் இலங்கை தமிழர் விவாகரத்தில் தி.மு.க இரட்டை வேடம் போடுகிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காண்பிப்பதாகவும் உள்ளது.முழுவதும் நனைந்த பிறகு முக்காடுஎதற்கு?தி.மு.க. இன்னமும் குழப்பத்தில் உள்ளதையே செயற்குழு முடிவுகள் கூறுகின்றன.இந்த இரட்டை வேட நடிப்பை முடித்துக் கொண்டு,தி.மு.க. இலங்கை தமிழர் விவகாரத்தில் உறுதியான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் என கூறியுள்ளார்.

ராஜ்யசபா எம்.பி பதவிக்காக கருணாநிதியின் காலில் விழுவாரா விஜயகாந்த்?
தேமுதிகவின் எம்.எல்.ஏக்கள் 6 பேர் 6 மாத காலத்துக்கு சஸ்பென்ட் செய்யப்பட்ட நிலையில் தமது மனைவி பிரேமலதா அல்லது மைத்துனர் சுதீஷை ராஜ்யசபா எம்.பியாக்குவதற்காக திமுகவின் ஆதரவைப் பெற அக்கட்சி முயலலாம் என்று தெரிகிறது. தமிழக சட்டசபையில் தேமுதிகவுக்கு 29 எம்.எல்.ஏக்கள் இருந்தாலும் 5 பேர் அணி மாறிவிட்டனர். தற்போது 6 எம்.எல்.ஏக்கள் முதலில் ஓராண்டு காலத்துக்கு சஸ்பென்ட் செய்யப்பட்டனர். பின்னர் 6 மாத காலத்துக்கு அதாவது ராஜ்யசபா தேர்தலலில் வாக்களிக்காத வகையில் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் அக்கட்சியின் 18 எம்.எல்.ஏக்கள்தான் ராஜ்யசபா தேர்தலில் வாக்களிக்க முடியும் என்ற நிலை உள்ளது. அதிருப்தியில் உள்ள 5 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தாலும் அவர்கள் தேமுதிகவின் வேட்பாளருக்கு வாய்ப்பளிக்கப் போவதில்லை என்பதுதான் நிதர்சனம். ஆக தேமுதிகவுக்கு தற்போது இருக்கும் ஒரே வாய்ப்பு 23 எம்.எல்.ஏக்களைக் கொண்ட திமுகதான். ஆனால் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழியின் பதவிக்காலம் முடிவடைவதால் அவரை மீண்டும் ராஜ்யசபா எம்.பியாக்க தேமுதிகவின் ஆதரவு தேவை. இதனால் விட்டுக் கொடுக்கப் போவது யார்? வெல்லப் போவது யாரு? என்ற சூடான விவாதம் தமிழக அரசியல் அரங்கில் உருவாகி உள்ளது.

தேமுதிக கேட்பதைப் போல் ஒரு ராஜ்யசபா சீட்டை விட்டுக் கொடுத்து லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைப்பதற்கு அஸ்திவாரம் போட்டுவிடலாம் என திமுக கருதலாம். ஆனால் அதற்காக தமது மகளின் எம்.பி. பதவியை பணயம் வைப்பதா என்பதுதான் திமுக தலைவர் கருணாநிதி முன் உள்ள தர்ம சங்கடம். திமுகவில் ஸ்டாலின் – அழகிரி இடையேயான விரிசல் உச்சகட்டமாகி விட்ட நிலையில் கனிமொழிக்கு எம்.பி. பதவி கிடைக்காமல் போனால் அவர் என்ன நிலைப்பாடு எடுப்பாரோ என்ற குழப்பம் திமுக தலைமைக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தைப் பொறுத்தவரையில் ஒரு ராஜ்யசபா சீட்டைப் பெற்றுவிட்டால் டெல்லி அரசியலில் வைக்கும் முதல் காலடியாக இருக்கும் என்பதுடன் டெல்லி அரசியல் வட்டாரங்களுடன் நெருக்கமான உறவை வளர்த்துக் கொள்ள பெரும் உதவியாக இருக்கும் என்பது கணக்கு. தமிழக அரசியலில் கடந்த காலங்களில் பாமக இப்படித்தான் ஒரு ராஜ்யசபா சீட் பிளஸ் இதர தேர்தல்கள் என்ற பார்முலாவை கடைபிடித்து அந்த ஒரு சீட்டை பெற்று மத்திய அமைச்சராகவும் கூட ஆனது. இந்த முன்னுதாரணத்தை பின்பற்றி எப்படியாவது ராஜ்யசபா எம்.பி சீட்டைப் பெறுவது என்பதில் கங்கணம் கட்டுகிறது தேமுதிக.

இரு கட்சிகளுக்கும் ஒரு ராஜ்யசபா சீட் என்பது மிக முக்கியம் என்பதால் திமுக- தேமுதிகவின் முடிவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொது மக்களை இணைத்து புதிய வழியில் போராட்டம்: தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு அறிவிப்பு.
பொது மக்களை இணைத்து புதிய வழியில் போராட்டத்தை முன்னெடுத்து நடத்த முடிவு செய்துள்ளதாக தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜோ பிரிட்டோ சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதை கண்டித்தும் தமிழீழத்திற்கு கிடைக்க வேண்டிய நீதியை தேடி 15 நாட்களுக்கும் மேலாக தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்களும் போராடி வருகிறோம்.

தற்போது, அனைத்து மாணவர்கள், பொது மக்களை இணைத்து புதிய வழியில் போராட்டத்தை முன்னெடுத்து நடத்த முடிவு செய்துள்ளோம். எந்த வகை போராட்டம் என்பதை விரைவில் அறிவிப்போம். போராட்டம் படிப்பிற்கும், பொது அமைதிக்கும் பங்கம் விளைவிக்காத வகையில் இருக்கும். இதற்காக தமிழகம் முழுவதும் பயணம் செய்து வரும் ஏப்ரல் முதல் வாரத் தில் மாணவர்கள் கட்டமைப்பு ஒரு இறுதியான வடிவம் பெறும். அரசியல் அனுபவம் உள்ள நடுநிலையான பொது வாழ் வில் எளிமையாக வாழும் ஆர்.நல்லக்கண்ணு, பழ நெடுமாறன் போன்றவர்கள் மாணவர்களாகிய எங்களுக்கு ஆலோசனை வழங்க அழைப்பு விடுக்கிறோம்.இவ்வாறு ஜோ பிரிட்டோ கூறினார்.

ஈழ தமிழர் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் கணேசன் கூறுகையில், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது நடந்த தாக்குதலை கண்டித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து சென்ட்ரல் அருகே தெற்கு ரயில்வே தலைமை அலுவலகம் வரை 28ம் தேதி பேரணி நடத்த உள்ளோம் என்றார்.

தான் நடித்த கவர்ச்சி காட்சிகளை சென்சார் பண்ணச்சொல்லும் காஜல்.
இந்தி, தெலுங்கு படங்களில் கவர்ச்சி புயலாகியிருக்கும் காஜல்அகர்வால், தமிழைப்பொறுத்தவரை ரொம்ப அடக்கிவாசிக்கிறார். அவரைப் பொறுத்தவரை தமிழக ரசிகர்கள் ரொம்ப டீசன்டானவர்கள். நடிகைகள் அளவான ஆடைகுறைப்பு செய்வதுதான் அவர்களுக்கு பிடிக்கும். ஓவர்டோஸ் கொடுக்கும் நடிகைகளை ஓரிரு படங்களிலேயே ஓரங்கட்டி விடுவார்கள் என்று கணித்து வைத்திருக்கிறார். அதனால் இயக்குனர்கள் பாடல் காட்சிகளில் கொஞ்சம் தூக்கலான கிளாமரை வெளிப்படுத்தலாமே என்று சொன்னால், தமிழ் ரசிகர்கள் ரசனை மிக்கவர்கள், அவர்களோடு நான் ஒத்துப்போகவே நினைக்கிறேன் என முந்திக்கொண்டு சொல்லி, அவர்களின் ஆசைக்கு அணை போட்டு விடுகிறார்.

ஆனால் இந்தி, தெலுங்கில் அப்படியல்ல. படத்துக்குப்படம் கவர்ச்சி மழை பொழிந்து வருகிறார். அதிலும் தெலுங்கைப்பொறுத்தவரை அயிட்டம் நடிகைகளே அலறிக்கொண்டு ஓடும் அளவுக்கு உச்சக்கட்டத்தை நெருங்கி விடுகிறார் காஜல். அப்படி அவர் சுமந்துக்கு ஜோடியாக நடித்த பவகுடு என்ற படம் தற்போது தமிழுக்கு ஓ என்ற பெயரில் டப்பாகிறது. இந்த சேதியைக்கேட்ட காஜல், அதிர்ச்சியடைந்து போயிருக்கிறார். காரணம், இப்படத்தில் பாடல் காட்சிகளை துக்கடா டிரஸ்களில் இளவட்ட ரசிகர்களை துவம்சம் செய்யும் வகையில் நடித்திருக்கிறாராம். ஆனால் அந்த கோலத்தில் தன்னை தமிழ் ரசிகர்கள் பார்த்தால் தனது மரியாதை போய்விடும் என்று நினைக்கிறாராம். அதனால் அப்படத்தை ரிலீஸ் செய்யும் படாதிபதியை தொடர்பு கொண்டு பாடல்களில் ஓவர் கிளாமராக இருககும் காட்சிகளில் கத்திரி வைக்குமாறு அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளாராம் காஜல்.

மகளின் திருமணத்தோடு வனவாசத்தை நிறைவு செய்கிறார் வடிவேலு..
ஒருவழியாக நடிகர் வடிவேலுவின் வனவாசம் முடிவுக்கு வருகிறது. விஜயகாந்த் மீது கொண்ட பகையால் அரசியல் களத்தில் புகுந்த வடிவேலுவுக்கு சினிமாவில் பலத்த அடி. இரண்டு வருடமாக சினிமா வாய்ப்பு இன்றி தவித்த வடிவேலு புலிகேசி இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார், தெனாலிராமன் கதையில் நடிக்கிறார், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார் என பல தகவல்கள் வெளியாகின. ஆனால் வடிவேலுவை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர் யாரும் முன்வரவில்லை. இதற்கிடையே இம்சை அரசன் புலிகேசி பார்ட்-2வில் வடிவேலு நடிக்க இருந்த நிலையில், கதையில் சில மாற்றங்கள் செய்ய சொன்னார். ஆனால் அதற்கு டைரக்டர் சிம்புதேவன் உடன்படவில்லை. அதனால் அப்படத்திலிருந்து விலகினார் சிம்புதேவன்.

இந்நிலையில் வடிவேலு தெனாலிராமன் படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. போடா போட்டி படத்தை இயக்கிய யுவராஜ் இயக்கும் “கஜ புஜ கஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும்” என்ற படத்தில் நடிக்கிறார். இதில் வடிவேலு தெனாலிராமன், கிருஷ்ணதேவராயர் என இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இமான் இசையமைக்கிறார். ஏ.ஜி.எஸ்., நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது தனது மகள் கல்யாணத்தில் பிஸியாக இருக்கும் வடிவேலு, மகள் கல்யாணத்தை முடித்த பிறகு தெனாலிராமன் படத்தில் நடிக்க போகிறார். ஆக வடிவேலுவின் வனவாசம் முடிவுக்கு வருகிறது.

சமந்தா களட்டிவிட்ட நாயகர்களை துரத்திப் பிடிக்கும் அமலாபால்.
ஆந்திர சினிமாவில் சமந்தாவைப்பற்றிய காதல் கிசுகிசுக்கள் வெளியாவது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. என்னதான் அவர் மறுப்பு செய்திகள் கொடுத்தாலும் அதை யாரும் நம்புவதாக இல்லை. அதனால், இப்போது தன்னை மற்றவர்கள் நம்ப வேண்டும் என்பதற்காகவே, உள்ளூர் மற்றும் வெளியூர் படப்பிடிப்புகளுக்கு செல்லும்போது தனியாக செல்வதை தவிர்த்து தனது அம்மாவை உடன் கூட்டிச்செல்கிறார் சமந்தா. அதோடு மட்டுமின்றி, ஸ்பாட்டில் நடிகர்களுடன் ஜாலியாக கடலை போடுவது, அரட்டையடிப்பதையெல்லாம் ஏறக்கட்டி வருகிறார். நன்றாக பழகிய ஹீரோக்கள் நட்புடன் புன்னகைத்தால்கூட அதை கண்டும் காணாதவர்போல் முகத்தை திருப்பிக்கொள்கிறாராம். இதனால் சமந்தாவின் நட்பு வட்டார நடிகர்கள் இப்போது அவர் மீது அதிருப்தியில் இருக்கிறார்களாம்.

இதை அறிந்த அமலாபால், இதுதான் சரியான தருணம் என்று சமந்தா ஏறக்கட்டும் அத்தனை ஹீரோக்களையும் தன்பால் இழுக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளார். தானே வலிய அவர்களை தேடிச்சென்று நட்பை வளர்க்கும் அமலாபால், தனக்கு ஆதரவு தருமாறும் அன்பான வேண்டுகோள் வைக்கிறாராம். இதையடுத்து, சமந்தா மீது அதிருப்தியில் இருக்கும மேற்படி நடிகர்கள், அமலாபாலின் நட்பில் திருப்தி அடைந்து தங்களிடம் கதை சொல்லவரும் இயக்குனர்களிடம் கதாநாயகிக்கு அவரது பெயரை முன்வைக்கிறார்களாம். இதனால் தற்போது சத்தமில்லாமல அமலாபாலின் தெலுங்கு சினிமா மார்க்கெட் எகிறத் தொடங்கியிருப்பதோடு, அவரது படக்கூலியும் கண்டபடி எகிறி வருகிறதாம்.

இலங்கை கொடுமைகள்: சுதந்திரமான விசாரணை கோரியது இந்தியா!- திருத்தம் கொண்டு வரவில்லை!
மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை சுதந்திரமான, உலக நாடுகள் ஏற்கக் கூடிய விசாரணையை நடத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

ஆனால் அமெரிக்காவின் தீர்மானத்தில் எந்த ஒரு திருத்தத்தையும் இந்தியா வலியுறுத்தவில்லை. ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூடத்தில் அமெரிக்கா, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைத் தாக்கல் செய்தது.

இந்தத் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது பேசிய இந்தியப் பிரதிநிதி திலீப் சின்ஹா, இலங்கையின் அனைத்து குடிமக்களும் முழுமையான மனித உரிமைகளை பெறுவதற்கும் உண்மையான தேசிய நல்லிணக்கத்தின் மூலமா அரசியல் தீர்வுக்குமான ஒரு சாளரத்தை அந்நாட்டின் எல்.எல்.ஆர்.சி. குழுவின் பரிந்துரைகள் உருவாக்கியிருக்கிறது.

2009-ம் ஆண்டு இந்த ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் அளித்த உறுதிகளை நிறைவேற்றுவதில் போதுமான முனேற்றத்தை இலங்கை வெளிப்படுத்தவில்லை என்பதை கவலையுடன் சுட்டிக்காட்டுகிறோம். 13- வது அரசியல் சாசன திருத்தத்தின் மூலமாக அரசியல் அதிகாரத்தை வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை இலங்கை மேற்கொள்ள வேண்டும்.

இலங்கையில் போர் முடிவுக்கு வந்தது என்பது தமிழர்கள் உட்பட அனைத்து இலங்கை சமூகத்தினரும் ஏற்கக் கூடிய ஒரு அரசியல் தீர்வுக்கான நல் வாய்ப்பாக இந்தியா கருதுகிறது.

அதி உயர் பாதுகாப்பு வலயங்களைக் குறைத்தல், வடமாகாணத்தில் ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட தனியார் நிலங்களை ஒப்படைத்தல், காணாமல் போதல், கடத்தப்படுதல் போன்றவற்றை குறைத்தல் என்பது உள்ளிட்ட எல்.எல்.ஆர்.சி.யின் பரிந்துரைகளை முழுமையாக உரிய காலத்துக்குள் இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும்.

சுதந்திரமான விசாரணை பொதுமக்களின் உயிரிழப்புக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சுதந்திரமான, நம்பகமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இதற்கு பொறுப்பேற்க இலங்கை முன்வர வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.

இத்தகைய நடவடிக்கைதான் அனைத்துலக சமூகத்தை திருப்திபடுத்தும் எனவும் எதிர்பார்க்கிறோம். இலங்கையின் அண்டை நாடு என்கிற வகையில் அந்நாட்டின் மறுசீரமைப்பு, மீள்குடியமர்த்தல் உள்ளிட்டவற்றில் இந்தியாவும் பங்களிப்பு செய்து வருகிறது.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்தோரை மீள் குடி அமர்த்தவும அங்கு வளர்ச்சிப் பணிகளை உள்கட்டமைப்புகளை மேற்கொளவதில் இந்தியா ஈடுபட்டு வருகிறது. இலங்கையின் வடமாகாணத்தில் வரும் செப்டம்பர் மாதம் தேர்தலை நடத்துவதாக இலங்கை அறிவித்திருக்கிறது.

வட மாகாண மக்கள் தங்களது ஜனநாயகக் கடமையை சுதந்திரமாக செயல்படுத்த வேண்டும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையரை இலங்கை அரசு அழைத்திருக்கிறது. இந்த அழைப்பை ஏற்று அவர் விரைவில் அங்கு செல்ல வேண்டும்.

இலங்கையில் அனைத்து சமூகத்தினரும் கண்ணியத்துடனும் சம உரிமையுடன் உரிய சட்டப் பாதுகாப்புடன் வாழ்வதற்கான அரசியல் தீர்வு மற்றும் அர்த்தமுள்ள நல்லிணக்கத்தை விரைவாக இலங்கை செயல்படுத்துவதற்கு இந்தியா ஊக்கமளிக்கும்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இலங்கையுடன் உறவு கொண்டிருக்கும் இந்தியாவானது, அந்நாட்டில் நடைபெறக் கூடிய நிகழ்வுகளைக் கண்டு கொள்ளாமல் இருக்க முடியாது என்றார். திருத்தம் கொண்டுவராத இந்தியா ஆனால் இந்தியாவின் இந்த நிலைப்பாடு கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.

இலங்கையில் நிகழ்ந்தது ஒரு இனப்படுகொலை, நிகழ்த்தப்பட்டது போர்க் குற்றம். இதற்காக ஒரு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதுதான் தமிழக அனைத்து அரசியல் கட்சிகள் மாணவர்களின் கோரிக்கை. இந்தக் கோரிக்கைக்காகவே கடந்த 10 நாட்களாக தமிழகத்தில் பெரும் போராட்டத்தையே மாணவர் சமூகம் நடத்திக் கொண்டு வருகிறது.

இதற்காக மத்திய அரசுக்கான ஆதரவை திரும்பப் பெற்று கூட்டணியைவிட்டே வெளியேறியது திமுக. ஆனால் அமெரிக்காவின் தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்ற ஒட்டுமொத்த தமிழகத்தின் கோரிக்கையை ஏற்காமல் பட்டுப்படாமல் ‘கருத்து’ மட்டும் தெரிவித்து உள்ளது மத்திய அரசு என்பது தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களின் தலைவர்களது கருத்து. அமெரிக்காவின் தீர்மானத்தில் இந்தியா திருத்தம் கொண்டுவராமல் அப்படியே ஆதரித்திருப்பது தமிழகத்தில் பெரும் ஏமாற்றத்தை உருவாக்கியிருக்கிறது.