நெஞ்சை உலுக்கும் ”வாக்குமூலம்” குறும்படம்: கைதாகி சித்திரவதைக்கு உள்ளாகும்போராளிகளின் கதை
( 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் , இதயம் பலவீனமானோர் பார்க்க வேண்டாம்)
ஈழத் திரைத்துறை கலைஞர்களால் “வாக்குமூலம்” எனும் குறும்படம் கார்த்திகை 27 2011 இல் வெளியிடப்பட்டது. இக் குறும்படமானது தமிழ் நாட்டில் இருந்து வெளிவருகின்ற “ஆனந்தவிகடன்” வார இதழில் வெளிவந்த ஒரு போராளியின் கடிதத்தை அடிப்படையாக கொண்டது. நெஞ்சை உலுப்பும் காட்சிகளைக் கொண்ட இத் திரைப்படத்தை 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், இதயம் பலவீனமானோர் பார்க்கவேண்டாம். எமது விடிவிற்காய்ப் போராடி இறுதியில் கைதாகி தற்போது கடும் சித்திரவதைகளை அனுபவித்து வரும் எம் தமிழ் இளைஞர்கள் மற்றும் யுவதிகளின் கதை இது.
இத் திரைப்படம் இணைய மற்றும் தொலைக்காட்சி ஆகிய ஊடக சட்ட திட்டங்களுக்கு அமைவாக எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். ஆனால் இதனை வெளியிட எவரும் முன்வரவில்லை என்பது வருத்தத்துக்குரிய விடையமாகும். இதனை புலம்பெயர் சமூகம் எவ்வளவு தூரம் கொண்டுசெல்லப்போகிறது ? அனைத்து ஊடகங்களும் இதற்கு முன்னுரிமை கொடுப்பார்களா? ?



