யாழ்ப்பாணத்திலிருந்து 2012 ஆம் ஆண்டின் வடமாகாண நாயகன், நாயகிகள்: எமில்டா போட்ட ஆட்டம்
யாழ்பாணத்தில் நடக்கிற கூத்தை பார்த்தீங்களோ !.யாழ்பாணத்தில் வடமாகாண நாயகன் & நாயகி தேர்தல் நடத்திபோட்டினமாம். போர் நடந்து முடிந்து 3 வருடமாகிவிட்டது., வடமாகாணத்துக்கான தேர்தல் எப்ப நடக்க போகின்றது என்று தெரியவில்லை. ஆனால் வடமாகாண �நாயகன் � நாயகி � தேர்தல் நடத்தி முடித்து முதல் தர வடிவான நாயகன் � வடிவான நாயகி யார் எனத் தெரிவு செய்துவிட்டார்கள். உண்மையில் இவர்கள் எங்கயோ போய்விட்டார்கள் பார்த்தீர்களா ? அதெல்லாம் சரி இவர்கள் இருவரையும் எங்கே இருந்து பிடித்துவந்தார்கள் என்று முதலில் தீரவிசாரிக்கவேண்டும் !
வெளிநாட்டில இருக்கின்றவர்கள் முள்ளிவாய்கால் பேரவலத்தை நினைந்து நினைந்து மூன்று வருடமாக அழுதுகொண்டு இருக்கிறார்கள். அதுவே இன்னமும் முடியவில்லை. ஆனால் யாழ்பாணத்தில் இருப்பவர்களுக்கு அப்படியொரு சம்பவம் நடந்ததாக நினைவேயில்லை. ஆட்டம் , பாட்டம், கொண்டட்டம் என அமர்களமாக சனம் மாறிப்போச்சு. நவீன உலகில் (வெளிநாடுகளில்) வாழும் புலம்பெயர் தமிழர்களின் பிள்ளைகள் கூட இன்னமும் செய்யாத (செய்யத்துணியாத) சங்கதியெல்லாம் யாழ்பாணத்தில் நடக்குது.
வெளிநாட்டில் உள்ள நம்மவர்கள் தான் நம்மட இனத்தின் எதிர்காலம், உரிமை, தாயகம், தேசியம், இராணுவ ஆக்கிரமிப்பு, சிங்கள குடியெற்றம் என தங்களுக்கு தாங்களே நினைத்து தலையை போட்டு உடைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் யாழ்ப்பாணம் வேறு பாதையில் அல்லவா போகிறது. இங்கே இது சும்மா நடக்கவில்லை. படத்தில் தலையைக் குனிந்துகொண்டு நிற்கும் நபர் யார் என்று உங்களுக்கே தெரியும். இமெல்டா சுகுமார் அம்மையார். இவர் யாழ்ப்பாணத்தில் இருக்கும்வரை எதுவேண்டும் என்றாலும் நடக்கலாம். ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை !



