நம்பியாரைப் பார்த்து “ஈழத்து எம்ஜிஆர்” என்ற பன்னாடை!
டக்ளஸ் தேவானந்தாவை ஈழத்து எம்ஜிஆர் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் இலங்கையில் நடந்த சந்திப்பு ஒன்றில் அழைத்துள்ளார்.
இலங்கை சென்றுள்ள சிஷ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டது.
அப்போது காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன், டக்ளஸ் தேவானந்தாவைப் பார்த்து, “ஈழத்து எம்.ஜி.ஆர்” என அழைத்துள்ளார்.
அப்போது டக்ளஸ் மெய் மறந்து நின்றதாக தகவல்கள் கூறுகின்றன. 
எம்ஜிஆர் ஐப் பற்றித் தெரியாத இக் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் உண்மையில் எம்.ஜி.ஆர் அவர்களைத் தான் கொச்சைப்படுத்தியுள்ளார்.அந்த மகத்தான உலகத் தமிழன் தமிழ் மக்களுக்குச் செய்த சேவைகளுடன் இவ் ஈனப் பிறவிகளின் செயற்பாடுகளை ஒப்பிடுவதா? தமிழர் மனங்களில் என்றுமே அழியா இடம் பிடித்த மக்கள் தலைவன் எம்ஜிஆருடன் சோற்றுக்கு அரசியல் செய்யும் கேவலமான , தமிழரால் மனிதர்களென்றே மதிக்கப்படாத ஓர் ஜடத்துடன் ஒப்பிட்டிருப்பதுதான் கேவலமான செயல்.
உண்மையில் டக்கிளசு ஈழத்து எம்.ஜி.ஆர் அல்ல. எம்.ஜி.ஆர் அவர்களுக்கு எப்போதுமே வில்லனாக வரும் நம்பியாருடனேனும் ஒப்பிடத் தகுதியற்றவர்.



